பிரான்சில் தீவிரவாதியால் தலை துண்டிக்கப்பட்ட பெண்! கண்ணீர் விடும் 30 காலத் ஆண்டு தோழி!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியால் தலை துண்டிக்கப்பட்ட பெண்மணி குறித்த விவரங்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

பிரான்சிலுள்ள Nice என்ற இடத்தில் அமைந்துள்ள தேவாலயத்திற்குள் நுழைந்த Brahim Aouissaou (21) என்னும் துனிசியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்கியுள்ளான்.

அதில் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், அவர்களில் ஒரு பெண்மணி தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது பெயர் Nadine Devillers (60) என்பதும், ஒழுங்காக தேவாலயம் செல்லும் பக்தி மிகுந்த கத்தோலிக்கப் பெண்மணி அவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தேவாலய தாக்குதல் குறித்து அறிந்ததும், கனடாவில் வாழும் Nadineஇன் தோழியான Joelle Guichardக்கு தன் தோழியின் ஞாபகம்தான் வந்திருக்கிறது. ஏனென்றால் அவரது வீடு தேவாலயத்துக்கு அருகில் இருப்பதும், அவர் தவறாமல் தேவாலயம் செல்பவர் என்பதும் அவரது 30 ஆண்டு கால தோழியான Joelleக்குத் தெரியும்.

அவரை தொலைபேசியில் அழைப்பதற்காக மொபைலை எடுத்துள்ளார் Joelle. அதில் ஏற்கனவே Nadineஇன் கணவரின் மிஸ்டு கால் இருப்பதைக் கண்டதும், பதறிப்போய் அவரை அழைத்துள்ளார் Joelle.

மறுமுனையில் Nadineஇன் கணவர் மொபைலை எடுத்ததும் விசும்ப, Joelleக்கு விடயம் புரிந்துவிட்டது.

கொல்லப்பட்டது அவளா என Joelle கேட்க, ஆம், அவள்தான் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார் Nadineஇன் கணவர்.

Joelleம் Nadineம் Nice நகருக்கு மேற்கே உள்ள Draguignan என்ற நகரில் வளர்ந்தவர்கள். 18 வயதாகும்போது Nadine, Niceக்கு குடிபெயர, Joelle கனடாவுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.

என்றாலும், தோழிகளின் நட்பு தொலைபேசி வாயிலாக உறுதியாக வளர்ந்திருக்கிறது. அதனால்தான் தன் தோழி இறந்தது Joelleக்கு தானாகவே புரிந்திருக்கிறது போலும்..
Previous Post Next Post