குளியாப்பிட்டி, நரமல்ல, பன்னால, கிரியுல்ல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரும்வரை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.