இலங்கையில் கொரோனா தீவிரம்! சமூக மட்டத்தில் 69 நோயாளி கண்டுபிடிப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நேற்றைய தினம் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணை அடுத்து, அப்பெண்ணுடன் அருகில் செயற்பட்ட 150 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று காலை கிடைக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர், கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தில் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் மினுவாங்கொடை ,திவுலப்பிட்டிய ,வெயாங்கொட பகுதிகளுக்கு சென்றுவந்தோர் மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் வசிப்போர் யாரேனும் காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பின் தயவுசெய்து மருத்துவரை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா தெரிவிக்கையில், இன்று காலை நிலவரப்படி 150 பேர் திவாலப்பிட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளுடன் பாடசாலையில் இருந்த 17 பள்ளி மாணவர்களும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மினுவாங்கோடாவைச் சேர்ந்த மேலும் 600 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என உபுல் ரோஹானா மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post