
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கம்பஹா, கிரின்டிவெல, தோம்பே, பூகோட, வீரகுல, கனேமுள்ள, வெலிவேரிய, மல்வத்முகிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் கம்பஹா தவிர்ந்த ஏனைய 11 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று பொலிஸ் தலைமையகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மினுவாங்கொட, திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட பொலிஸ் பிரிவுகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கம்பஹா பொலிஸ் பிரிவிலும் இன்று மாலை 6 மணி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

