சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வார இறுதி நாள்களான நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அல்லது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படாது என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோரோனா பரவல் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்ட சில பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்று எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Previous Post Next Post