எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கரீபியன் வழியாக கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்றதற்காக 65,000 கனடிய டொலர் வரை கட்டணம் வசூலித்த ”ஒரு மோசமான கனேடிய மனித கடத்தல்காரன்” என இவரை அமெரிக்கா விபரித்துள்ளது. அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களின்படி, புலம்பெயர்ந்தோரைக் கொண்டு செல்வோர் வசூலிக்கும் தொகையில் ஸ்ரீகஜமுகன் செல்லையா மிகப்பெரிய தொகையைப் பெற்றுள்ளதாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ரொரன்ரோ மற்றும் கைகோஸ் கடற்கரையில் கடந்த ஒக்டோபரில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு கப்பலில் சிக்கிய இலங்கையின் ஒரு குழுவில் சி $28,000 முதல் சி $ 65,000 வரை கட்டணம் வசூலித்ததாக ரொரன்ரோவில் வசிக்கும் ஸ்ரீகஜமுகன் செல்லையா மீது எஃப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.
2003 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் மனிதக்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்று வந்த ஸ்ரீகஜமுகன் செல்லையா, 2019ஆம் ஆண்டில் ஹெட்டியில் இருந்து தமது கடலுக்குள் நுழைந்த ஒரு படகில் இருந்த ஸ்ரீகஜமுகன் செல்லையாவை டர்க்ஸ் மற்றும் கைக்கோஸ் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஸ்ரீகஜமுகனை பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட ரோயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்.
2019ஆம் ஆண்டில் ஹெட்டியில் இருந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவு கடலுக்குள் நுழைந்த படகில் 28 இலங்கையர்கள் மற்றும் ஒரு இந்தியர் உட்பட 158 பயணிகளை ஏற்றிச்செல்லப்பட்டனர். இதனால் ஸ்ரீகஜமுகன் செல்லையா அந்த நாட்டில் சட்டவிரோத குடியேறல் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.
ஜூன் மாதத்தில் தமது குற்றங்களை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் 2020 ஜூலை பிற்பகுதியில், அமெரிக்க அதிகாரிகள் குறித்த இலங்கையர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினர்.
ஸ்ரீகஜமுகன் செல்லையா பணத்துக்காக பெருமளவான இலங்கையர்களை டர்க்ஸ் மற்றும் கைகோஸிலிருந்து பஹாமாஸ் மற்றும் அமெரிக்காவின் வழியாக கனடாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டே அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்காவுக்கு வேறு நாட்டினரை அழைத்து வருவதற்கான சதி மற்றும் பணத்துக்காக அமெரிக்காவுக்குள் வேறு நாட்டினர் செல்வதற்கு ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் ஸ்ரீகஜமுகன் செல்லையாவின் மீது சுமத்தப்படவுள்ளன என அண்மையில் செய்திகள் வெளியாகின.
ஸ்ரீகஜமுகன் செல்லையா தொடர்பில் 2017ம் ஆண்டு எழுதப்பட்ட மனுவில் அவர் கிட்டத்தட்ட 1750 நபர்களை அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.. அவர்களில் பலர் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவினால் இவர் அதிகளவிலான பணத்தை வசூலித்து ஆட்கடத்தலை மேற்கொண்ட ஓர் மோசமான ஆட்கடத்தல்காரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.