எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில் வடமகாணா சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி உள்பட துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திலேயே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களை நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டதில் மக்கள் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா மையங்கள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளிலும் அனுமதி மறுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.