யாழில் ஆவா குழு ரவுடிகள் இருவரின் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள பொருள்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞனை வாளால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஆவா வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்த நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமற்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே ஆவா வினோதனின் வீட்டில் வன்முறைக் கும்பல் ஒன்றால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பித்த ஆவா குழுவின் ரௌடி தேவா என்வரின் வீட்டுக்குள்ளும் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டு தப்பித்துள்ளது.

இணுவில் துரை வீதியில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த தாக்குதல் நடத்திய 10 நிமிடங்களின் பின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

உடுவில் மல்வத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாயில் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் ஆவா குழுவின் ரௌடி தேவா நாட்டிலிருந்து தப்பித்து இந்தியாவில் இருப்பதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post