ரிஷாட் எம்.பிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தம்பதி கைது!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மருத்துவரும் அவரது துணைவியாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை எபினேசர் பிளேஸில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றவியல் விசாரணைத் திணைக்கள துறை (சிஐடி) அதிகாரிகளால் இன்று அதிகாலை தெஹிவளையில் உள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டார்.

அவர் மறைந்திருந்த வீட்டில் வசிக்கும் தம்பதியினரே கைது செய்யப்பட்டனர்.

மருத்துவரின் மனைவி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நெருங்கியவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெஹிவளைக்கு வருவதற்கு முன்னர், எம்.பி. பதியுதீன் தஞ்சம் கோரிய மற்ற இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Previous Post Next Post