யாழ்.வலி.தெற்குப் பிரதேச சபையில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பெண் உறுப்பினர்!! (படங்கள்)

யாழ்.வலி,தெற்கு பிரதேசசபை பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் வட்டார விகிதாசார உறுப்பினர்கள் என பாகுபாடு காட்டி நிதி ஒதுக்க வேண்டாம் என பெண் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வின்போது தரையில் அமர்ந்து இன்றைய தினம் போராட்டத்தை நடத்தியிருந்தார்.

வலி, தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

வருடம் தோறும் ஒதுக்கப்படும் சபை நிதியில் வட்டார உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் நிலையில் விகிதாசார உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படும் நிலை இடம்பெறுவதாக சபையில் சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

இதன்போது வட்டார உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் வட்டாரத்தில் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறியதுடன் அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் சிபாரிசில் விகிதாசார உறுப்பினர்கள் தமது திட்டங்களை வைக்கலாம் என கூறினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விகிதாசார உறுப்பினர்கள் தமது வட்டாரத்தில் கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தாம் தெரிவு செய்யப்பட்டதால் தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.

இவ்வாறு குழப்பநிலை இடம்பெற்றபோது குறித்த விகிதாசார பெண் உறுப்பினர் தனது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வதற்காக வட்டாரம் விகிதாசாரம் என்ற வேறுபாடின்றி சமனாக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தரையில் அமர்ந்து கவன ஈர்ப்பை நடத்தினார்.


Previous Post Next Post