எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
(02 ஆம் இணைப்பு)
அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தடவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.
(01 ஆம் இணைப்பு)
புங்குடுதீவில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.