இலங்கையில் பெண்ணுக்குக் கொரோனா உறுதி! மக்களுக்கு எச்சரிக்கை!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
திவுலபிடிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அந்தப் பெண் தற்போது கொழும்பு தேசிய தொற்று நோயியல் (ஐடிஎச்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து கம்பஹா மருத்துவமனையின் 15 ஊழிகயர்கள் மற்றும் பெண் பணிபுரிந்து வந்துள்ள ஆடைக் கைத்தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 உத்தியோகத்தர்கள் அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணுடன் தொடர்புடையவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு பெறப்படும் அறிக்கையை தொடர்ந்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து செயற்படுமாறும் அமைச்சுக் கேட்டுள்ளது.
Previous Post Next Post