வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார் இ.போ.ச. பேருந்துடன் மோதி விபத்து! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இ.போ.ச பேருந்தை முந்திச் செல்ல முயற்சித்த கார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மட்டக்களப்பு - செட்டிப்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை அதே வழிப்பாதையூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் முந்திச்செல்ல முயற்சித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் சாரதியினது அதிவேகமான வாகனச் செலுத்துகையே இவ் விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தின் போது காரினது முன் பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பேருந்தினது பின் பகுதியும் சேதமடைந்துள்ளது. இவ் விபத்து சம்மந்தப்பட்ட மேலதிக விசாணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post