யாழில் வாள்களுடன் வீடு புகுந்த வன்முறைக் கும்பல்! பெண் உட்பட இருவர் மீது தாக்குதல்!!


மல்லாகம் நீலியம்பனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பெண் உள்பட இருவரைத் தாக்கியதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாஙை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 வாள்கள், கோடாரி என்பவற்றுடன் முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்த 4 பேருக்கி மேற்பட்டவர்களைக் கொண்ட கும்பல், பெண்ணை இரும்புக் கம்பி ஒன்றினால் தாக்கியதுடன் குடும்பத்தலைவரையும் தாக்கியுள்ளது.

அத்தோடு வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பொருள்களை தாக்கிச் சேதப்படுத்திவிட்டு கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post