எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அவனால் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் Simone Barreto Silva (44) என்ற பெண்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Simone, 30 ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவந்துள்ளார், அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
கத்தியால் பலமுறை குத்தப்பட்டாலும் Simone தேவாலயத்திலிருந்து தப்பி, அருகிலுள்ள காபி ஷாப் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அவருக்கு உதவச் சென்ற மருத்துவ உதவிக்குழுவினரிடம், கடைசியாக உயிர் பிரிவதற்கு முன், என் பிள்ளைகளிடம், நான் அவர்களை நேசிக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் Simone. அதுதான் Simone கடைசியாக பேசிய வார்த்தைகள்...