நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற மானம்பூ திருவிழா! (படங்கள்)


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று நல்லூரான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.

தற்காலச் சூழ்நிலைக்கு அமைய ஆலயத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் கந்தசுவாமியார் எழுந்தருளினார்.


Previous Post Next Post