கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை அதிகாலை 5 மணி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் 43 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை மாலை 5 மணிவரை, 110 பணியாளர்கள் கோரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் உள்ள தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்குள் உள்ள தொழிற்சாலைகளின் ஊழியர்கள் தங்கள் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பகுதிகளுக்குள் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அந்தப் பிரதேசங்களில் மினுவாங்கொட கோவிட் -19 கொத்தணி தோன்றியதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
Previous Post Next Post