யாழ்.பருத்தித்துறையில் குழு மோதல்! பொலிஸார் மீதும் கடும் தாக்குதல்!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருதித்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் தொடராக சம்பவம் தொடர்பில் ஒரு தரப்புடன் கதைக்க முற்பட்ட பொலிஸார் இருவர் மீதும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருதித்துறை புனிதநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் இன்று பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தரப்பும் கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன் தடிகளுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் மோதல் நகர்ந்து பருதித்துறை நகர் வரையும் சென்றிருக்கின்றது.

அங்கு மோதலில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸார் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் பருதித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மற்றைய தரப்பினருக்கு சாதகமாக கதைக்க முற்பட்டபோதே தாம் தாக்கியதாக தாக்குதல் நடத்திய தரப்பு குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலாளிகளை கைது செய்வதற்கு பருதித்துறைப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது.
Previous Post Next Post