பிரான்ஸில் ஆசிரியர் படுகொலை! ஆட்டத்தை ஆரம்பித்தது அரசு!! இழுத்து மூடப்படுகிறது பள்ளிவாசல்!!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், ஆசிரியரைப் படுகொலை செய்ததன் பின்னர் அவர்கள் பற்றிய விபரங்களைத் தேடுவதில் பொலிஸார் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். அத்துடன் அரசு தரப்பும் பல்வேறு பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக 93 ஆவது மாவட்டம் சென் செந்தனி மாவட்டத்தின் பெந்தன் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்று உடனடியாக மூடப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமியப் பயங்கரவாதியால் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியர் பற்றி குறித்த பள்ளிவாசலின் தலைவர் தவறான கருத்துக்களை வெளியிட்டார் என்பதனாலேயே இப் பள்ளிவாசல் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post