
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட மூவருக்கே இன்று (ஒக்.28) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியையடுத்து யாழ்ப்பாணத்தில் 9 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கோரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 40 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது.