கொரோனா தொற்று உறுதியான புங்குடுதீவுப் பெண் தொடர்பில் வெளியான தகவல்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறையில் யாழ். புங்குடுதீவுக்கு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவரில் ஒருவருக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த பெண் தொடர்பான தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று முன்தினமிரவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உள்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

அவர் கடந்த 4 நாள்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பமும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வீடு திரும்பிய பெண்ணுக்கே கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றார்.

Previous Post Next Post