எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் அச்சுவேலி குட்டியபுலத்தைச் சேர்ந்த சீலன் (வயது -31) என்பவரே உயிரிழந்தார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக்கட்டுப்பாட்டையிழந்த மாருதி சுவிட் கார் சுமார் 50 மீற்றர் இழுத்துச் சென்று மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டது. மின்கம்பம் முறிந்து கார் மேல் வீழ்ந்துள்ளது.
சம்பவத்தையடுத்து அம்புலன்ஸில் இருவரும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் சாரதி உயிரிழந்துள்ளார்.
சாரதி காரினுள் மாட்டிக்கொண்ட நிலையில் அம்புலன்ஸ் சாரதியும் உதவியாளரும் அவரை மீட்டெடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.