எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனாவுடன் நாங்கள் சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதுடன், இந்த நிலைமை அடுத்து வரும் கோடை காலம் வரை நீடிக்கும் எனக் கூறியுள்ளார்.
பெல்துவாஸ் மாவட்டத்தில் உள்ள பொந்துவாஸ் மருத்துவமனைக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் அடுத்த வாரம் அளவிலேயே தெரியவரும். அவை சரியாக அமையாத பட்சத்தில் மேலும் இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை என்றும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்;கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற தீவிர நடவடிக்கைகளின் பெறுபேறுகள் 15 முதல் 18 நாட்கள் வரை எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு பெறுபேறுகள் சாதகமாக அமையாது விடின் உள்ளிருப்பு நடவடிக்கைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகுதி பகுதியான உள்ளிருப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயத்தைக் கருத்தில் கொண்ட பிரதமர், அடுத்த வாரத்தில் கொரோனாக் கட்டுப்பாடுகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் மற்றும் லியோன் போன்ற பெரிய நகரங்களில் தற்போது கொரோனாத் தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே இந்த நகரங்களில் முதலில் உள்ளிருப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தலாம் என வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தற்போது உடனடியாக வார நாட்களில் மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.