எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இருந்தும் கடந்த 24 மணித்தியாலயத்தில் 1798 பேருக்குப் புதிதாகத் தொற்று இனக்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிப்பட்டவர்கள் விழாக்கள் நடத்துவதற்கு 150 பேர் மட்டுமே பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஒரு பிரதேசத்தில் ஒரு இலட்சம் பேரில் 35 பேருக்குக் கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டால் அப் பகுதிகளில் இடம்பெறும் விழாக்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு பிரதேசத்தில் ஒரு லட்சம் பேரில் 50 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பின், அப் பிரதேசத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அங்கு பிழையான தகவல்கள் வழங்கப்படுமாக இருந்தால் ஆயிரம் யூரோ தண்டமாக அறவிடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.