எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அதில் தமிழ் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் எதற்காக அவர் கைதானார் என்ற விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
நேற்றைய தினம் அப்பகுதியில் நடந்தது என்ன என்பதை பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, லண்டனில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் சவுத் ஹரோ( Sauth Harrow) பகுதியிலுள்ள தமிழ்க் கடை ஒன்றுக்குள் ரொமேனிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆயுதத்துடன் புகுந்து மிரட்டியுள்ளார். அவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆயுததாரி நேற்று சவுத் ஹரோவில் உள்ள பூங்கா ஒன்றில், துப்பாக்கியால் சுட்டுப் பார்த்து விட்டு, தமிழ் கடை ஒன்றுக்குள் புகுந்து மிரட்டியுள்ளார்.
தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக மிரட்டிய ரொமேனியாவை சேர்ந்த நபர் ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை காவல்துறையின் ஆயுதம் தாங்கிய சிறப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியினையும் பறிமுதல் செய்தனர். இதன்போது அருகில் இருந்த தமிழ் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பயன்படுத்த சிறப்பு படையினர் உலங்குவானுர்தி மூலம் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். இந்தச் சம்பவம் நேற்று லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களின் முன்னர் குறைடன் பகுதியில் இலங்கை இளைஞன் ஒருவர் பொலிஸாரைச் சுட்டுக் கொலை செய்யப்பட்டதன் பின்னர் பிரித்தானிய பொலிஸார் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றமையாலேயே இச் சம்பவத்தில் உலங்கு வானூர்தி சகிதம் தேடுதலை நடத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் தெரிவிக்கையில்,
குற்றவாளிகளை அடையாளம் காணவும், தொடரவும், குற்றவாளிகளை நீதிக்கு கொண்டு வரவும், ஆயுதங்களை வீதியில் இருந்து எடுத்துச் செல்லவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், ஈடுபடவும், பொதுமக்களுக்கு உறுதியளிக்கவும், எங்கள் சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் நாங்கள் எப்போதும் அயராது உழைப்போம்.
அனைவரையும் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், உங்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயலைக் கண்டால், ஏதேனும் ஆபத்துக்கள் இருந்தால், அல்லது சந்தேகத்திற்குரிய குற்றத்தைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், தயவுசெய்து பொலிஸை 101 க்கு அழைக்கவும். அவசரகாலத்தில் எப்போதும் 999 க்கு உடன் அழைப்பினை ஏற்படுத்துங்கள் எனவும் பிரித்தானியவாழ் மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.