பிரான்ஸில் அரச நிதி உதவிபெறும் குடும்பங்களுக்கு மீண்டும் விசேட கொடுப்பனவு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குடும்ப உதவித் தொகை,(bénéficiaires du RSA) வீட்டு வாடகை உதவிக் கொடுப்பனவு (allocations logement-APL) போன்றவற்றைப் பெற்றுக் கொள்கின்ற குடும்பங்களுக்கு மீண்டும் ஒரு விசேட கொடுப்பனவாக 150 ஈரோக்கள் வழங்கப்படவுள்ளது.

இக் கொடுப்பனவு குடும்பம் ஒன்றுக்கு 150 ஈரோக்களும், குழந்தைகளுக்கு தலா 100 ஈரோக்களுமாக 450 ஈரோக்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதிபர் மக்ரோன் நேற்றைய தனது தொலைக்காட்சி கேள்வி- பதில் நிகழ்ச்சியில் இந்தக் குடும்ப உதவி குறித்தும் அறிவித்தார். 

அரச நிதி உதவி பெறும் குடும்பங்களுக்கு இதே போன்றதொரு விசேட கொடுப்பனவு பொது முடக்க காலப்பகுதியில் முன்னரும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விசேட கொடுப்பனவு எக்காலப்பகுதியை உள்ளடக்கியதாக எப்போது வழங்கப்படும் என்பன போன்ற விவரங்களை பிரதமர் பின்னர் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தொலைக்காட்சி நேர்காணலில் அதிபர் மக்ரோன் அறிவித்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாடு ஒன்றை பிரதமர்Jean Castex முக்கிய அமைச்சர்களுடன் இணைந்து இன்று வியாழன் பிற்பகல் 2 மணிக்கு நடத்த உள்ளார்.

நன்றி:
Kumarathasan Karthigesu
Previous Post Next Post