ஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று! - பிரான்சில் இன்று பதிவு!!


ஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிகூடிய தொற்று இன்று பிரான்சில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் 41,622 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒரே நாளில் இந்த அளவான தொற்று பிரான்சிலும் பதிவானதில்லை, ஐரோப்பாவிலும் பதிவானதில்லை.

அதேவேளை, இன்று 165 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 34,210 ஐ தொட்டுள்ளது.

கடந்த 7 நாட்களில் புதிதாக 10,166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் நேற்று 13.7% கொரோனா தொற்று வீதமாக இருந்த நிலையில், இன்று அது 14.3% வீதமாக உயர்வடைந்துள்ளது. 
Previous Post Next Post