பிரான்ஸில் ஊரடங்கில் நடமாட அனுமதிப் பத்திரம் வெளியாகியது!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இரவு ஊரடங்கு சமயத்தில் வெளியே நடமாடவேண்டிய தேவையுள்ளவர் களுக்கான அனுமதிப் படிவங்களின் மாதிரிகளை பிரான்ஸின் உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது.

அதன் இணையத்தில் இலகுவில் தரவிறக்கம் (télécharger) செய்யக்கூடியவாறு வெளியிடப்பட்டிருக்கும் மாதிரிப் படிவங்களை அச்சு வடிவங்களிலும் டிஜிட்டல் சாதனங்களிலும் பெற்றுப் பூரணப்படுத்திக் கொள்ள முடியும்.

download (télécharger)

தனிநபர் பயன்பாட்டுக்கான படிவங்களுடன் தொழில் வழங்குநர்கள் தமது பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய படிவத்தின் மாதிரி வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது.

பாரிஸ் பிராந்தியம் உட்பட ஒன்பது பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு விதிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைமுறைக்கு வந்ததன. அது இன்று சனிக்கிழமை தொடக்கம் தினமும் இரவு 21மணிமுதல் மறுநாள் காலை 06 மணிவரை நடைமுறையில் இருக்கும்.

ஊரடங்கை மீறி நடமாடுவோரிடம் முதல் தடவை 135 ஈரோக்கள் அபராதம் அறவிடப்படும். ஒருவர் மூன்று தடவைகள் மீறும் பட்சத்தில் பெருந்தொகை அபராதத்துடன் சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடலாம்.
Previous Post Next Post