எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே இவர் மனநலம் குன்றியவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த கொலைச் சந்தேகநபர், கொலை இடம்பெற்ற தினத்தில் சுயநினைவுடனேயே இருந்துள்ளார் என்றும் இவருக்குக் கொரோனாத் தொற்று இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை, மது தொடர்பான பரிசோதனைகள் இந் நபருக்கு மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவ்வாறான பழக்கங்களுக்கு அவர் அடிமையாகவில்லை என பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை பிரான்ஸ் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வுகளில், இந்தக் குடும்பஸ்தர் உணவகம் ஒன்றில் சமையல் துறையில் பணியாற்றியவர் என்றும் குழந்தைகள் மீது பற்றும் அக்றையும் கொண்டவர் என்றும் பிரான்ஸ் சமூகத்தவர்களுடன் தொடர்பாடல் உடையவர் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர், தனது மனைவி, 5 வயது மற்றும் 18 மாத தனது கைக் குழந்தையையும், அத்துடன் 8 வயது மற்றும் 11 வயதுடைய இரு மருமக்களையும் கத்தி மற்றும் சுத்தியல் போன்றவற்றால் கொடூரமாகக் கொலை செய்திருந்தார்.
அத்துடன், தனது சகோதரியையும், கணவரையும் படுகாயப்படுத்தியதுடன், மேலும் இரு மருமக்களையும் தாக்கி காயப்படுத்தியதுடன், தானும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார்.
இச் சம்பவத்தில் ஐவர் பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் தெரிவிக்கையில்,
இவர் தனது 18 மாதக் கைக் குழந்தையை மூச்சுத் திணற வைத்தே கொலை செய்ததாககவும், கொலைகள் இடம்பெற்ற அன்றைய தினத்தில் வீட்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 10 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் இக் கொலைகள் நிகழ்த்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருந்தும் இக் கொலைக்கான காரணங்கள் இதுரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.