நயினாதீவு - குறிகாட்டுவான் படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நயினாதீவு - குறிகாட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை (06.10.2020) இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலை பயணிகள் கவனத்தில் எடுக்குமாறு படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

பயணிகளும் நிலைமையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

புங்குடுதீவில் அடையாளம் காணப்பட்ட நோய்த் தொற்றாளரோடு எவரேனும் பயணித்து இருந்தால் உடனடியாக வைத்தியசாலையை நாடி உங்களினதும் மக்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.
Previous Post Next Post