கோவிட் -19 நோயால் மேலும் ஐவர் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 14ஐச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். உயர் குருதி அழுத்தம், நீரிழிவு மற்றும் கோவிட் -19 ஆகியன அவருடைய உயிழப்புக்கு காரணம் என உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கபட்டுள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் கோவிட் -19 நோய்க்காக முள்ளேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு உயர் குருதி அழுத்தம், மூளையினால் குருதிக் கசிவு என்பன காரணம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

இரத்மலானையைசேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருடைய உயிரிழப்புக்கு உயர் குருதி அழுத்தம், நீரிழிவு மற்றும் கோவிட் – 19 நோய் ஆகிய எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு 13ஐச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டியில் உயிரிழந்துள்ளார். அவருடைய உயிரிழப்புக்கு கோவிட் – 19 நோய் மற்றும் மாரடைப்பு என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு 13ஐச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டியில் உயிரிழந்துள்ளார். அவருடைய உயிரிழப்புக்கு கோவிட் – 19 நோய் மற்றும் ஆஸ்துமா என்று கண்டறியப்பட்டுள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 5 வாரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 15 ஆயிரத்து 921 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரத்து 31 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post