எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் - கரம்பகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நீண்டகாலமாக சமூகச்சீர்கேட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகளால் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கொடிகாமம் பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சற்று முன்னதாக குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த வீட்டில் சமூகச்சீர்கேட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.