எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமூக இடைவெளி, சுகாதார நடவடிக்கைகள் கடைப்பிடிக்காத பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது, கொரோனா பரிசோதனையின் போது பலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
இது போன்ற நிகழ்வுகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிகளை மக்கள் சரியாக பின்பற்றவேண்டும், இல்லையெனில் இப்படி தான் கொரோனாவை ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் வாங்க நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
சமூக இடைவெளி, சுகாதார நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு பிரான்ஸ் காவல்துறை அதியுச்ச தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது,
மேலும், அண்மையில் பிரான்சில் Orléans நகரில் தமிழர் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.