சரவணையில் கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட இளைஞர்கள்! (படங்கள்)
byYarloli
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.தீவகம், சரவணைப் பகுதியில் கிணறு ஒன்றில் விழுந்த மாட்டை அப் பகுதி இளைஞர்களும் வேலணை பிரதேச சபையினரும் இணைந்து உயிருடன் மீட்டுள்ளனர்.
அப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட குறித்த கிணற்றில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாடு விழுந்த நிலையில் அதனை மீட்பதற்கு எவரும் முன்வராத நிலையிலேயே இளைஞர்களும் பிரதேச சபையினரும் இணைந்து இன்று மீட்டுள்ளனர்.