எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள இன்று (நவ.14) சனிக்கிழமை காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாட்டிறைச்சி வாங்கச் சென்ற கோப்பாயைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாடு போல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் குத்தி தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இறைச்சி வாங்க வந்தவர் மதுபோதையில் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் கத்தியால் குத்தியதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து மாட்டிறைச்சிக் கடைக்கு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.