எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பொதுமுடக்க காலத்தில் Auchan, Cora, Carrefour போன்ற பெரு வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, சிறு வணிக நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தகடை, தொலைபேசி கடை, உடைகள் என சிறு வணிகத்தை பெரு அங்காடிகள் உள்ளடக்கியுள்ளன. இவ்வணிகத்தினை மேற்கொள்கின்ற சிறு வணிக நிறுவனங்களை மூடச்சொல்லிவிட்டு, இவ்வணிகத்தினை உள்ளடக்கிய பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது சமனற்ற நீதி என சிறு வணிகர்கள் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சிறு வணிகத்தை உள்ளடக்கிய பெரு வணிக நிறுவனங்களின் அவ்வியாபார பகுதிகள் மூடப்பட வேண்டும் அல்லது சிறு வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், Véronique Weingarten என்ற பெண்ணொருவர் உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளார்.
Blotzheim (Haut-Rhin) பகுதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றினை இவர் நடாத்தி வருகின்றார். 4500 குடிமக்களை கொண்ட சிறு நகரம் ஒன்றில் இவரது வியாபார நிலையம் உள்ளது.
இந்நிலையில், பெரு நிறுவனங்களின் தமது சிறு வணிக வியாபார செயற்பாடுகளை நிறுத்தி அப்பகுதிகளை மூடுவதற்hன உத்தரவினை வழங்கும் முடிவினை இன்று இரவு அரசாங்கம் எடுக்கும் என தெரியவருகின்றது.