கோவிட் -19 நோயால் 21ஆவது நபர் உயிரிழப்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் கோவிட் -19 நோய்த் தொற்றால் 21ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.

வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று (ஒக்.31) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 10 ஆயிரத்து 856 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 905 பேர் சுகமடைந்துள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 17, 18 மற்றும் 19ஆவது கோவிட் -19 நோய் தொடர்பான உயிரிழப்புக்கள் ஒக்டோபர் 27 அன்று பதிவாகியுள்ளன.
உயிரிழந்த மூன்று பேரும் வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது ஆண், கொம்பனித் தெருவைச் சேர்ந்த 87 வயது பெண் மற்றும் ஜா-எலயைச் சேர்ந்த 42 வயது ஆண்.

இதற்கு முன்னர், வைரஸ் தொடர்பான 14, 15, மற்றும் 16 வது உயிரிழப்புக்கள் இந்த மாத தொடக்கத்தில் பதிவாகியுள்ளன. நேற்று குலியாபிட்டியாவைச் சேர்ந்த குலியாபிட்டியாவைச் சேர்ந்த 56 வயதான இருதய நோயாளி உயிரிழந்தார்.

இந்த நிலையில் 21ஆவது உயிரிழப்பும் நேற்று இடம்பெற்றுள்ளது. அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை தொடர்பான பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று கிடைத்துள்ளது.
Previous Post Next Post