
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ப.மயூரனும் போட்டியிட்டனர்.
நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டு தடவைகள் தோல்வியடைந்ததால் தவிசாளர் தனது பதவியை இழந்துள்ளார்.
அதனால் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று பிற்பகல் 2 மணிக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஆரம்பமானது.
முதல்வர் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர் பத்மநாதன் மயூரன் 10 வாக்குகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மதுசுதன் 9 வாக்குகளையும் எடுத்தனர்.
அதனால் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவானார்.
