
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாநகரில் பல வீதிகளில் வெள்ளம் தேங்கிக் காணப்படுகிறது. பல வீதிகளில் வெள்ளம் பாய்கிறது.
புரவி புயல் கடந்த புதன்கிழமை இரவு வடக்கு மாகாணத்தை கடந்த சென்ற நிலையில் கடந்த 4 நாள்களாக மழை பொழிகிறது. நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தில் தெளிவான வானிலை காணப்பட்ட போதும் பிற்பகல் மழை பொழிய ஆரம்பித்தது.
நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பொழிந்தது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.












