
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
திருச்சி மாநகரில் மசாஜ் மையங்களில் ( ஸ்பா) நடத்தப்பட்ட தொடர் சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு , காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவில் திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் விபசாரத் தடுப்பு தனிப்படை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினார்.
இதில், டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட டிக் டாக் சூர்யா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை. இந்த மையத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.