எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குறித்த ஊழியர் மருதனார்மடம் சந்தைக்கு தினமும் சென்று வாடிக்கையாளர்களிடம் வங்கிக்கான பணத்தினை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்.
இதனால் மருதனார்மடம் சந்தையிலிருந்து அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இதேவேளை குறித்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் நாளை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த ஊழியரின் மனைவி ஸ்கந்தவரோதயா கல்லூரியின் ஆசிரியை என்றும் தெரியவந்துள்ளது.