யாழில் மேலும் ஐவருக்குக் கொரோனா! தொற்று எண்ணிக்கை 156 ஆக உயர்வு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (ஜன. 8) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொத்தணியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் இவ்வாறு தொற்று உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்ட இருவர் அரச நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இருவரில் ஒருவர் மருதங்கேணி மற்றயவர் தாவடியைச் சேர்ந்தவர். அவர்கள் இருவருடன் பணியாற்றிய தெல்லிப்பழையைச் சேர்ந்தவருக்கு தொற்றுள்ளமை ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 126 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
Previous Post Next Post