எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சி மற்றும் கடற்கரையை பார்க்க வரும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு, சென்னை டாக் என்ற யூடியூப் சேனல் தொந்தரவு செய்வதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை செய்ததில் பெசன்ட் நகர் கடற்கரையில், அடிக்கடி பெண்களை வற்புறுத்தி ஆபாசமாக பேட்டி எடுப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து பெசன்ட்நகர் நகர் ஊரூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய 3 பேர் மீது, பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்தும் மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மேலும் ஆபாசமாக வீடியோக்கள் வெளியிடப்பட்ட சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.