எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கடந்த ஞாயிறன்று அங்குள்ள தமிழ் கடையொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த பெண்ணை மிரட்டி அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி அங்குள்ள தமிழ் வர்த்தகர் ஒருவர் தமது கடைக்காக பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்ய சென்றபோது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பணத்தையும் முக்கியமான சில ஆவணங்களையும் பறித்து சென்றுள்ள சம்பவம் ஒன்றும் கடந்த புதனன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வரும் நிலையில் தமிழர் வணிக வளாகங்களை குறிவைத்து இடம்பெறும் இவ்வாறான தொடர் கொள்ளைகள் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிரான்ஸ் லாக்கூர்னே பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் என்ற வர்த்தக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கிச் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.