யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் லண்டனில் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்  லண்டனில் நேற்று (10) உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான புவிவீரசிங்கம் கோபிதாசன் (வயது-40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கவில்லை என்றும், மாரடைப்பு ஏற்பட்டே உயிரிழந்துள்ளதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையைபிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் புவிவீரசிங்கம் கோபிதாசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை 10/01/2021 இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலம் சென்ற புவிவீரசிங்கம் , சந்திரவதணி தம்பதிகளின் மூத்த மகனும், திரு திருமதி இளங்கோவன் வாசுகி தம்பதிகளின் மருமகனும்.

கோமதியின் அன்புக்கணவரும் அச்சனாவின் பாசமிகு தந்தையுமாவார்

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு  அன்னாரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.

தொடர்புகளுக்கு : 00442083123821

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், அரச நியமங்களையும், சட்டங்களையும் மதித்து உங்கள் பாதுகாப்பையும், எங்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வீட்டுக்கு வருவதை முற்று முழுதாக தவிர்த்துக் கொண்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Previous Post Next Post