மீண்டும் தூபி அமைக்க நான் தயார்! பல்டி அடித்தார் துணைவேந்தர்!! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமை எனக்கும் கவலைதான், அது மேலிடத்தின் உத்தரவிலேயே இடிக்கப்பட்டது என யாழ். பல்கலை துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாரென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

இன்று பல்கலை முன்றிலில் இடம்பெறும் போராட்ட களத்திற்கு சென்ற இவர், துணைவேந்தரை சந்தித்து பேசினார். இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இடிக்கப்பட்ட நினைவிடத்தை மீள கட்டுவேன் என்றும், மாணவர்களுக்கு உள்ள அதே உணர்வு தனக்கும் உள்ளதாக அவர் தெரிவித்தார்

அதேவேளை நாம் மீண்டும் தூபியை அமைப்பதற்குரிய அனுமதி பெறுவது உள்ளிட்ட விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் துணையாக இருக்க வேண்டுமென்றார்.
Previous Post Next Post