பிரான்ஸில் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்? பிரதமர் அலுவலகத்தில் அவசர கூட்டம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பிரான்ஸின் பிரதமர் அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட ஒரு கலந்துரை யாடலில் நாட்டில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைத் தடுக்க அவசரமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டிருக் கின்றன.

இரவு ஊரடங்குக் கட்டுப்பாட்டை நாடெங்கும் மாலை ஆறு மணியாக நீடிப்புச் செய்யும் யோசனை உட்பட பல விடயங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருப்பதாக பாரிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக் கின்றன. 

தற்சமயம் 25 மாவட்டங்களில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு மாலை ஆறு மணி தொடக்கம் அமுலுக்கு வருகிறது. ஏனைய இடங்களில் அது இரவு எட்டு மணிக்கே ஆரம்பிக்கிறது. 

"இங்கிலாந்து வைரஸ்" எனப்படும் மரபு மாறிய புதிய கிருமி நாடெங்கும் பரவி வருகிறது. சில முக்கிய நகரங்களில் கொத்தணியாகத் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் இத்தொற்று ஒரு பெரும் வெடிப்பாக மாறித் தீவிரமடையும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரிட்டனில் உருவாகியிருக்கும் நிலைவரத்தை அனுபவமாகக் கொண்டு நாட்டை முன்கூட்டியே முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

"மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது இந்தக் கட்டத்தில் அவசியம் இல்லை" என்று பிரதமரும் அரசாங்கப் பேச்சாளரும் இன்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த விடயம் புதன்கிழமை எலிஸே மாளிகையில் அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெறவிருக்கின்ற அடுத்த பாதுகாப்புச்சபைக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

முதலில் இரவு ஊரடங்கு நேரத்தை நீடித்து மக்களின் நடமாட்டங்களை மேலும் முடக்கிவிட்டு அதன் பின் நிலைவரத்தைப் பொறுத்து கடைசி நடவடிக்கையாகப் பொது முடக்கம் பற்றி தீர்மானிக்கலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் (Imperial College London) தகவலின்படி தென்கிழக்கு இங்கிலாந்தில் கடந்த ஆண்டு செப்ரெம்பரில் கண்டறியப்பட்ட மரபு மாறிய கொரோனா வைரஸே உலகெங்கும் சுமார் நாற்பது நாடுகளில் பரவி உள்ளது.

'பிரிட்டிஷ் வைரஸ்' , 'இங்கிலாந்து வைரஸ்' , 'பிரித்தானிய வைரஸ்' எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்ற இந்தக் கிருமி முன்னையதை விட 50 வீதம் வேகமாகப் பரவுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post