யாழ்.இந்துக் கல்லூரி மாணவனின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தம்முடன் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவனை பல்கலைக்கழக மாணவர்கள் மாலையுடன் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை முடிவுறுத்த அறிவுறுத்தி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்தும் , மீளவும் தூபி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் , பல்கலை சூழலில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் முன்றலில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர் தர மாணவன் , பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தானும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பாடசாலை மாணவனின் உணர்வுகளை மெச்சிய , பல்கலைக்கழக மாணவர்கள், அவனது உடல் நிலையை கருத்தில் கொண்டும் குடும்ப சூழல் மற்றும் தாயின் நிலமையை கருத்தில் கொண்டும் அவனது உணவுதவிர்ப்புப் போராட்டத்தை முடித்து வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் தாம் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post