எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் மண்டைதீவுப் பகுதியில் காணி சுவீகரிப்பு இடம்பெறவிருந்த நிலையில், மக்களின் எதிர்ப்பை அடுத்து அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், மண்கும்பான் பகுதியிலும் காணி சுவீகரிப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மண்டைதீவில் இடம்பெற்ற எதிர்ப்பால் இதுவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்த காணி சுவீகரிப்புச் செயற்பாடுகள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வேலணை பிரதேச செயலகம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.