சுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சுவிஸ் நாட்டின் சூரிச் (Zürich) மாநிலத்தில் வசித்துவந்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாதன்திட்டம், புன்னைநீராவி, விசுவமடுவை பிறப்பிடமாக கொண்ட மகேந்திரன் சுஜீபன் (வயது-24), சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை காணாமல் போன நிலையில், அவரது வீட்டிற்கு அருகிலுள் காடொன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டமைக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post